தனிநபர் தகவல் பாதுகாப்பு, பொதுவான விதிகள்

யாழ்சிறியின் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரது தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பதில் யாழ்சிறி அக்கறை கொண்டுள்ளது. யாழ்சிறி சேவைகளை உங்களுக்கு முழு அளவில் அளிப்பதற்கு, சில சமயங்களில் உங்களைப்பற்றிய தகவல்களை நாங்கள் பெற வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதுபோன்ற தகவல்களை நீங்கள் அளிக்கும்போது, தனிமனித தகவல் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு அவற்றை நாங்கள் கையாளவேண்டும் என்ற கடப்பாடு எம்மீது உள்ளது. மற்றவர்களால் நடத்தப்படும் இணையதளங்களுக்கு இட்டுச் செல்லும் இணைப்புகள் எமது இணையதளங்களில் உள்ளன. வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு யாழ்சிறி பொறுப்பாகாது; அவற்றை பயன்படுத்துவதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு.

குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு

நீங்கள் 18 அல்லது அதற்கு குறைவான வயதுடையவராக இருந்தால், யாழ்சிறி இணையதளத்தில் உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை அளிப்பதற்கு முன்னர், உமது பெற்றோர்/ உமக்கு பொறுப்பானவரின் அனுமதியைப் பெறவேண்டும். இவ்வாறு முன் அனுமதி பெறாதவர்கள் தங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை எங்களுக்கு வழங்குவது அனுமதிக்கப்படாது.