ஈழத்து ஆலயங்கள்

 • All News
 • கோபுரத்தின் மீது வட்டமிட்டு ஆசிர்வதித்த கருடன்!
 கோபுரத்தின் மீது வட்டமிட்டு ஆசிர்வதித்த கருடன்!
Jan 27
கோபுரத்தின் மீது வட்டமிட்டு ஆசிர்வதித்த கருடன்!

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் பல ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலய கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யும் முன்பாக கருடன் வட்டமிட்டு ஆசிர்வதித்தை கண்டு பலரும் பக்தி பரவசமடைந்தனர்.மேலும், எந்த ஆலயமாக இருந்தாலும் கருட பகவான் வட்டமிட்ட பின்னர் தான் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். கருடன் ஏன் கோவில் கோபுரத்தின் மீது வட்டமிடுகிறது என்று பார்க்கலாம்.கருடன் பட்சி ராஜன். பெருமாளின் வாகனம். பெருமாள் ஆலயங்களில் கருட வாகனத்தில் எழுந்தருளும் காட்சியைப் பார்க்கவே ஏராளமானோர் கூடுவார்கள். கும்பாபிஷேகம் நடைபெறும் போது அங்கு ஆறுகால யாக பூஜைகள் நடைபெறும்.அந்த யாக பூஜைகள் திருப்தியாக இருந்தது என்பதை உணர்த்தவும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கவுமே கருடபட்சிகள் கோபுரத்தின் மீது வட்டமிடுகின்றன.நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது நான்கு கருடன்கள் ஒன்றாக வட்டமிட்டதைப் பார்த்து கூடியிருந்த அனைவரும் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று முழுக்க மிட்டனர். அதன் பிறகே குடமுழுக்கு நடைபெற்றது. கோபுரத்தின் மேல் கருடன் வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிடும் வரை காத்திருப்பார்கள். வானத்தில் கருடனைப் பார்த்த பின்னரே கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். 


Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (23:56 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (23:56 pm )
Testing centres