கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு ஆயுதம் தாங்கிய படையினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், மின்தடை நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று விசாரிப்பதாக கூறி மிரட்டி உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த வகையில், கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் என்பவருக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.
கல்முனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழு காரியாலயத்தின் இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அசீஸ் என்பவரிடம் இம்முறைப்பாட்டினை நேற்றைய தினம் கையளித்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்திருப்பதாவது,
கடந்த 2 ஆம் திகதி இரவு மின்தடை நேரம் பெரிய நீலாவணையிலுள்ள எனது வீட்டுக்கு வந்த ஆயுதம் தரித்த நான்கு இராணுவத்தினரும் கொழும்பு புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய இருவரும் விசாரிக்க வந்ததாகக் கூறினர்.
கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப் பிரிவினர் என்று அவர்கள் கூறியமையால் அவர்களிடம் அவர்களது உத்தியோக அடையாள அட்டையை கேட்டேன். ஆனால், அவர்கள் அடையாள அட்டையைத் தர மறுத்தனர்.
நான் கல்முனையில் உண்ணாவிரதமிருந்தமை தொடக்கம் கடந்த மாதம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வரை நான் சம்பந்தப்பட்ட விடயங்களில் என்னை துருவித்துருவி விசாரித்தனர்.
இறுதியில் வெளியில் நடமாடக் கூடாது என்று அச்சுறுத்தியதோடு, எனக்கும் மனைவி பிள்ளை மற்றும் மருமகனுக்கும் பயமுறுத்தி அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர்.
இதற்கு முன்னும், 2018ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலின் போதும், 2019ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலின் போதும், 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இனந்தெரியாத ஆயுத குழுக்கள், காவல்துறையினர், புலனாய்வுக் குழுவினர் எனப் பலரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வந்து என்னை மிரட்டினர்.
தற்போது மீண்டும் இவ்வாறாக அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ளனர். இதனால் எனக்கு மனித உரிமையுடன், சுதந்திரமாக வாழமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு உதவ முடியாத நிலையில் உள்ளேன்.
சமுகசேவை செய்யத் தடை ஏற்பட்டுள்ளது. உளவியல் ரீதியான தாக்கம் அதிகமாக உள்ளது. எனது குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் பயபீதியுடன் நடைப்பிணமாக என் குடும்பத்துடன் காலம் கடத்தி வருகிறேன்.
இது தொடர்பாக எமது அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலைஅரசனிடமும் விடயங்களைத் தெரியப்படுத்தியுள்ளேன். எனவே இவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு எனக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பல பகுதிகளில் நடக்கும் மோசடி நடவடிக்கை தொட
விடுதலைப் புலிகள் வருகின்றனர் என அம்பாறை நவகிரியாவ கா
துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்து
அம்பாறையில் தலைக்கவசம் அணியாத நபரை பொலிஸார் கொடூரமாக
அம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவட
புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர
எரிபொருள் நெருக்கடி காரணமாக முழு நாடும் செயலிழந்துள்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது சகோ
அம்பாறை - அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பி
நாட்டிலேற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் மாண
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட ந
அம்பாறை - பாலமுனையின் முள்ளிமலையில் அத்துமீறி பௌத்த வ
அம்பாறையில் புல் வெட்டுவதற்க
அக்கரைப்பற்று, இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்